St.Aloy

புனித அலாய்சியு கொன்சாகா சே.ச.


          புனித அலாய்சியு கொன்சாகா சே.ச. இத்தாலியில் மான்றுவா நகரில் பெர்டினான்ட் கொன்சாகா என்ற பிரபுவின் முதல் பிள்ளையாகப் பிறந்தவர். இவரின் தந்தை இவர் பேரும் புகழும் உள்ளவராகப் திகழ வேண்டுமென விரும்பி, போர் வீரரின் தலைவராகும் பயிற்சி கூட அளித்தார். ஆனால் இவரின் தாய் ஊட்டிய சத்துள்ள ஞானப்பாலின் விளைவாகப் பிளாரன்ஸ் நகரில் 9 வயதிலேயே மரியன்னையின் பேராலயத்தில் கற்பென்னும் வார்த்தைப் பாட்டை இவர் எடுத்துக் கொண்டார். வுhரத்தில் 3 நாட்கள் கடுந்தவம் இருப்பார். இன்னும் பல கடுமையான ஆன்மீக தவ முயற்சிகளையும் செய்து வந்தார்.
    13 வயதில் இவர் தம் பெற்றோருடன் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றார். ஆங்கே 2ஆம் பிலிப்புவின் அரசு அவையிலேயே முழு நேரம் தங்கினார். அரசகுல மக்களில் ஒருவராகவே நடத்தப்பட்டார். ஆங்கே நிலவிய பலதரப்பட்ட சீர்கேடுகளின் நீரோட்டத்தில் சிக்காமல் கடுமையான முயற்சிகளை எடுத்து எதிர்நீச்சல் போட்டார். இந்த வேளையில் இந்தியாவிற்கு இயேசு சபையினர் சென்று நற்செய்தி பரப்பும் பணியில் ஈடுபாடு கொண்டுள்ளதைப் பற்றிய நூல் ஒன்று அவருக்கு கிட்டியது. ஆத்தகைய இயேசு சபையில் சேர வேண்டும் என்ற முடிவை அரண்மனை வாழ்வின் நடுவே ஸ்பெயினில் எடுத்துக்கொண்டார்.
    இதன்பின் தம் தந்தையுடன் 4 ஆண்டு காலம் பனிப் போராட்டம் நடத்தினார். திருச்சபையின் அரியணைகளில் வீற்றிருந்தவர்கள் மூலமாகவும் கூட இவரது முடிவைக் கலைக்க இவர்தம் தந்தை முயன்றார். இறுதி வெற்றி இளைஞர் அலாய்சியுக்கே கிடைத்தது. தமக்கு வரவேண்டிய சொத்தையெல்லாம் தம் தம்பிக்கு எழுதி வைத்தார்.
    கி.பி. 1587 இல் இயேசு சபையில் சேர்ந்தார். புpன்னர் குரு மாணவராக படிக்கும் போது, உரோமையில் பலர் பிளேக் நோயினால் தாக்கப்பட்டனர். ஆவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இவர் அவர்களுக்குப் பணிபுரிந்தார். ஆந்தச் சூழலில் 1591 இல் இவரும் கொடிய நச்சுக் காய்ச்சலுக்குப் பலியானார். ஆப்போது இவருக்கு வயது 23 மட்டுமே. இத்தனை குறைந்த ஆண்டுகளுக்குள் ஏராளமான புண்ணியங்களைச் செய்து வான்வீட்டிற்குத் தயார் நிலையில் தம்மை ஆக்கிக் கொண்டார்.
    1726இல் திருத்தந்தை 13ஆம் பெனடிக்ட் இவருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். இரு திருத்தந்தையர்கள் இவரை இளைஞர்களின் பாதுகாவலர் என்று அழைக்க தயங்கவில்லை. புனிதராவதற்கு இந்த இளைஞர் தமது கோட்பாடாக, 'நிகரில்லாத நித்திய சம்பாவனைக்குமுன் இந்த உலக மகிமை எம்மாத்திரம்!' என்று சொல்லிக்கொண்டே இருப்பாராம்.
    இயேசு சபையில் புனிதராகவும், மறைவல்லுநராகவும் வாழ்ந்த புனித இராபர்ட் பெல்லார்மின் தான் இவருக்கு ஆன்ம குருவாய் இருந்தார். ஒருமுறை அலாய்சியுவிடம் இவர், ஓர் ஆன்மா, உத்தரிக்கும் வேதனை அடையாமலேயே நேராக விண்ணகப்பேரின்பம் பெற முடியும் என்று கூறினார். இதைக் கேட்டதும் அலாய்சியு பரவசமடைந்தார். ஆந்த நேரத்திலேயே, கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்ததின் திருநாளுக்கு 8 நாளுக்குப் பின்னர் தாம் இறக்க போவதாக உணர்ந்தாராம். ஆவ்விதமே தெதேயும் என்ற நன்றிப் பாடலை இசைத்துக்கொண்டே தமது தூய ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார். ஆலாய்சியு தமது 23 ஆண்டுகால வாழ்வில் ஒருமுறை கூட சாவான பாவத்தில் விழுந்தவரல்லர் என்று அவரின் ஆன்மகுரு கூறுகின்றார்.